குமரி மாவட்டத்தில் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான இளவட்டக்கல் தூக்குதல் போட்டி

  குமரி மாவட்டத்தில் கேப்டன் கே ஜிம் நடத்தும் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான இளவட்டக்கல் தூக்குதல் போட்டி மிகவும் பிரமாண்ட முறையில் நடைபெற்றது. இரண்டு நாளாக நடைபெற இருக்கும் போட்டியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் Vijay Vasanth அவர்கள் துவக்கி வைத்தார் இதில் பல்வேறு இளைஞர்கள் கலந்து கொண்டனர் போட்டியின் இறுதி நாளான நாளை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கல்லை தூக்கி போட இருக்கின்றனர் இந்த போட்டியை இந்தியாவின் இரும்பு மனிதன் கண்ணன் அவர்கள் […]

Continue Reading

சுனாமி பேரலை தாக்குதலின் இன்று 21-ம் ஆண்டு நினைவு

கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலின் இன்று 21-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் கன்னியாகுமாரி (கி) மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் SR.மாதவன் தலைமையில்,கழக இணைச் செயலாளர் பிரேம்குமார் முன்னிலையில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தபட்டது.உடன் மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் வழக்கறிஞர் A.காமராஜ் கண்ணன் அவர்களும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நிகேஷ் அவர்களும், கன்னியாகுமாரி […]

Continue Reading

தமிழகத்தின் மிக முக்கியமான உணவுத்துறை நிறுவனமான ‘உதயம்’ நிறுவனத்தை கையப்படுத்தியது ரிலயன்ஸ் – உணவுத் துறையில் புதிய மாற்றமா?

தமிழகத்தின் வீடுகளோடு பல ஆண்டுகளாக இணைந்துள்ள உணவுத்துறை நிறுவனங்களில் உதயம் (Udhayam) சமையல் எண்ணெய், மசாலா, அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களால் மக்களிடம் நம்பிக்கையை பெற்ற இந்த நிறுவனம், தற்போது நாட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ரிலயன்ஸ் குழுமத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக வணிக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி தமிழக உணவுத்துறை சந்தையில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. உதயம் நிறுவனம் தமிழகத்தில் மட்டுமல்லாமல், தென் இந்தியா முழுவதும் ஒரு பிரபலமான பிராண்டாக உருவெடுத்தது. “வீட்டு சமையலின் […]

Continue Reading

2025 கிறிஸ்துமஸ் தயார் செய்வது எப்படி?

2025 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் வேகமாக நம் வாசலில் நெருங்கிக் கொண்டிருக்கிறது இந்த வருடம் தொழில்நுட்ப வளர்ச்சி, ஆன்லைன் ஷாப்பிங் வசதிகள் மற்றும் குடும்பத்துடன் செலவிடும் நேரத்தின் முக்கியத்துவம் அதிகமாக பேசப்படும் சூழலில், கிறிஸ்துமஸ் தயாரிப்புகளும் ஒரு புதிய பரிமாணத்தை எடுத்து வருகின்றன. கிறிஸ்துமஸ் என்பது விழாவை மட்டுமல்ல; நம் மனதை சுத்தப்படுத்தி, குடும்ப உறவை உறுதிசெய்து, பிறருக்கு நன்மை செய்யும் ஒரு நன்னாளும் கூட. அப்படியானால், 2025 கிறிஸ்துமஸை எவ்வாறு அழகாகவும் சிரமமில்லாமலும் தயாரிக்கலாம்? இது […]

Continue Reading

மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை

தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 29ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக மன்னார்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று முதல் 29ஆம் தேதி வரை மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு ,நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க […]

Continue Reading

அமித்ஷா போட்ட உத்தரவு… தமிழகம் வரும் ஸ்பெஷல் டீம்…

அமித்ஷா போட்ட உத்தரவு… தமிழகம் வரும் ஸ்பெஷல் டீம்- பீகார் முடிந்தது அடுத்து தமிழ்நாடு தான்… பீகார் தேர்தல் முடிந்த உடனே தமிழகம் மற்றும் மேற்கு வங்காளம் பக்கம் தன்னுடைய பார்வையை திருப்பி இருக்கிறார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. மேற்கு Shri Amit Shah வங்கத்தில் ஏற்கனவே எதிர்கட்சியாக இருக்கும் பாஜக இனி வரும் தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது. அதே போன்று தமிழகத்தில் திமுகவை […]

Continue Reading

திருநங்கையை காப்பாற்றிய பத்திரிகையாளர்கள்

திருநங்கையை காப்பாற்றிய பத்திரிகையாளர்கள் நெல்லையில்: 11 Nov 2025 திருநங்கைகள் நடத்தியசாலை மறியல் போராட்டத்தின் போது திருநங்கை ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இதை கவனித்த செய்தியாளர்கள் ஓடிச் சென்று அவரை காப்பாற்றினார். நெல்லை நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் சிலர் இலவச வீட்டு மனை வழங்ககோரி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திருநங்கை ஒருவர் திடீரென தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய […]

Continue Reading