
குமரி மாவட்டத்தில் கேப்டன் கே ஜிம் நடத்தும் முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான இளவட்டக்கல் தூக்குதல் போட்டி மிகவும் பிரமாண்ட முறையில் நடைபெற்றது. இரண்டு நாளாக நடைபெற இருக்கும் போட்டியை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் Vijay Vasanth அவர்கள் துவக்கி வைத்தார் இதில் பல்வேறு இளைஞர்கள் கலந்து கொண்டனர் போட்டியின் இறுதி நாளான நாளை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கல்லை தூக்கி போட இருக்கின்றனர் இந்த போட்டியை இந்தியாவின் இரும்பு மனிதன் கண்ணன் அவர்கள் நடத்தி வருகின்றார் குறிப்பாக மாவட்ட அளவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும் இளைஞர்கள் போதை அடிமையாகாமல் உடல் வலிமையை மேம்படுத்தும் விதமாக இந்த போட்டியை நடத்தி வருகின்றார் இதில் வெற்றி பெறும் முதல் 10 வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். முதல் இடத்தில் வெற்றி பெறுவதற்கு பணம் முடிப்பு 5000 ரூபாய், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு 3000 ரூபாய், மூன்றாம் இடம் பிடிப்பவருக்கு ஆயிரம் ரூபாய் என விகிதம் பரிசு வழங்கப்படுகிறது. கண்ணன் கூறுகையில் இந்த இளவட்டக்கல் தூக்குதல் போட்டியை தமிழக அளவில் மிகவும் பிரமாண்ட முறையில் வருங்காலங்களில் நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் .

