
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் NO HELMET NO ENTRY விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஓட்டும் திட்டம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் NO HELMET NO ENTRY முன்னெடுப்பை இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் மனதில் பதிவு செய்யும் நடவடிக்கை
* பல விபத்துகளில் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யாததால் உயிர் இழப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது.
* ZERO ACCIDENT KUMARI என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முயற்சியாக NO HELMET NO ENTRY என்ற விழிப்புணர்வினை மாவட்ட முழுவதும் தீவிரப்படுத்தும் விதமாக அனைத்து பள்ளி கல்லூரிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் ஓட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளார்கள்
* இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணங்களில் பதிவு செய்வதன் மூலம் ஹெல்மெட் அணிந்து போக்குவரத்து விதிகளை மதித்து இருசக்கர வாகனம் ஓட்டும் சமுதாயத்தை உருவாக்க முடியும்

