‘கோஸ்ட் பெய்ரிங்’ (GhostPairing) வாட்ஸ்அப் மோசடி: உஷாராக இருப்பது எப்படி?

News Popular News Recent News Technology

வாட்ஸ்அப்பில் தற்போது நடைபெறும் புதுவித சைபர் மோசடி குறித்தும் அதில் இருந்து பாதுகாத்து கொள்வது பற்றியும் செய்திக்கதிரின் சிறப்பு பதிவில் பார்க்கலாம்.

என்ன மோசடி?

ஓடிபி அல்லது சிம் மாற்றம் இன்றி, வாட்ஸ்அப் கணக்கை முழுமையாக கைப்பற்றும் புதிய மோசடி முறை.

எதை பயன்படுத்துகிறார்கள்?

வாட்ஸ்அப்பின் சட்டபூர்வமான Linked Devices (இணைக்கப்பட்ட சாதனங்கள்) அம்சம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

மோசடி எப்படி தொடங்குகிறது?

அறிமுகமானவர் அனுப்பியது போல் தோன்றும் ஒரு செய்தி வரும். அதில் “உங்கள் புகைப்படம்” போன்ற வாசகத்துடன் ஒரு லிங்க் இருக்கும்.

லிங்கை கிளிக் செய்தால் என்ன நடக்கும்?

சமூக வலைதளத்தைப் போல தோன்றும் போலி இணையதளம் திறக்கும். ‘சரிபார்ப்பு’ என்ற பெயரில் உங்கள் வாட்ஸ்அப் எண்ணை உள்ளிடச் சொல்வார்கள்.

இதன் மூலம் என்ன செய்கிறார்கள்?

நீங்கள் அறியாமலேயே, மோசடியாளரின் சாதனம் உங்கள் வாட்ஸ்அப் கணக்குடன் Linked Device ஆக இணைக்கப்படுகிறது.

ஓடிபி வராதா?

இல்லை. ஓடிபி, கடவுச்சொல், சிம் கட்டுப்பாடு எதுவும் தேவையில்லை.

கைப்பற்றிய பிறகு என்ன செய்ய முடியும்?

உங்கள் மெசேஜ்களைப் படிக்க
புகைப்படங்கள், வீடியோக்களை பார்க்க
உங்கள் பெயரில் மற்றவர்களுக்கு மெசேஜ் அனுப்ப
உங்கள் தொடர்புகளை மோசடிக்கு இழுக்க

எப்படி பாதுகாப்பு பெறலாம்?

சந்தேகமான லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்

WhatsApp → Settings → Linked Devices அடிக்கடி சரிபார்க்கவும்

அதில், தெரியாத சாதனங்கள் இருந்தால் உடனே Remove செய்யவும்

Two-step verification கட்டாயம் ஆன் செய்யவும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *